இந்திய ஹெலிகாப்டரையே சுட்டு வீழ்த்திய இந்திய அதிகாரிகள்மீது நடவடிக்கை

 

இந்திய ஹெலிகாப்டரையே சுட்டு வீழ்த்திய இந்திய அதிகாரிகள்மீது நடவடிக்கை

பாகிஸ்தானுடன் போர் என்ற அளவுக்கு செய்திகள் அப்போது பிசியாக இருந்த நேரத்தில் இந்த சொந்த வீட்டுக்கு தீவைத்த கதையை சுலபமாக அரசும் ராணுவமும் வெளியில் வராமல் பார்த்துக்கொண்டன. தேர்தல் முடிந்துவிட்டது. இப்போதுதான் அதுகுறித்து செய்திகள் வர ஆரம்பிக்கின்றன.

கடந்த ஃபிப்ரவரி மாதம் காஷ்மீரின் புல்வாமாவில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி தரும்விதமாக, இந்திய விமானப்படை துல்லிய தாக்குதலை நடத்தியது. தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அடுத்த நாள், பாகிஸ்தான் பதில் தாக்குதலுக்காக அவர்களுடைய விமானங்களை இந்திய எல்லைக்குள் அனுப்பியது, அவர்களை விரட்டியடிக்கச் சென்ற இந்திய விமானங்களில் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதும், அபிநந்தன் கைது-விடுலை உள்ளிட்ட செய்திகளும் எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.

Pulwama Attack

பாகிஸ்தான் விமானங்களை விரட்டி அடிக்கும் சண்டையில், அதிகம் பேசப்படாத செய்தி ஒன்று இப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, பாகிஸ்தான் விமானங்களை விரட்டும் அவசரகதியில் நமக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நமது அதிகாரிகளின் உத்தரவுப்படி ஏவுகணை தாக்குதலில் வீழ்த்தப்பட்டதும், அதில் 6 விமானப்படை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்ததும் அதிகம் பேசப்படாமல் போனது.

IAF Helicopter shot

தேர்தல் முடிந்த அடுத்த இரண்டு நாட்களில் இந்த சந்தேக மேகம் விலக ஆரம்பித்துள்ளது. அதாவது, எதிரி விமானமா அல்லது நமது விமானமா என்பதை எளிதில் அறிவதற்காக ஒவ்வொரு ஹெலிகாப்டரிலும் இருக்கும் பாதுகாப்பு சாதனம் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டரில் இயங்காமல் போனதால், வந்தது எதிரிநாட்டு ஹெலிகாப்டர் என்ற அச்சத்தில் நமது அதிகாரிகளே ஏவுகணையை ஏவியிருக்கிறார்கள். பாகிஸ்தானுடன் போர் என்ற அளவுக்கு செய்திகள் அப்போது பிசியாக இருந்த நேரத்தில் இந்த சொந்த வீட்டுக்கு தீவைத்த கதையை சுலபமாக அரசும் ராணுவமும் வெளியில் வராமல் பார்த்துக்கொண்டன. தேர்தல் முடிந்துவிட்டது. இப்போதுதான் அதுகுறித்து செய்திகள் வர ஆரம்பிக்கின்றன.

தாக்குதலுக்கு காரணமாக ஒரு உயரதிகாரி மற்றும் நான்கு அதிகாரிகள்மீது துறைரீதியான‌ விசாரணை விரைவில் ஆரம்பமாகும் என்றும், குற்றம் உறுதி செய்யப்பட்டால், அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் இப்போது தெரிய வந்துள்ள‌து. புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட 40 வீரர்கள், தாக்குதலுக்குப்போன விமானம் பாகிஸ்தானில் வீழ்த்தப்பட்டது, அபிநந்தன் கைது, நம் மண்ணிலேயே 6 அதிகாரிகள் கொல்லப்பட்டது இவை எல்லாம் நாம் இழந்தது. பதிலுக்கு பாகிஸ்தான் இழந்தது ஒரு விமானமும் 300 மரங்களும். என்ன அருமையான துல்லிய தாக்குதல்!!