இந்திய ஹாக்கி அணிக்காக பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்த நயன்தாரா: வைரல் வீடியோ!

 

இந்திய ஹாக்கி அணிக்காக பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்த நயன்தாரா: வைரல் வீடியோ!

நடிகர் ஷாருக்கான், நயன்தாரா இடம்பெற்றுள்ள ஜெய்ஹிந்த் இந்தியா பாடலின் புரொமோ வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

சென்னை: நடிகர் ஷாருக்கான், நயன்தாரா இடம்பெற்றுள்ள ஜெய்ஹிந்த் இந்தியா பாடலின் புரொமோ வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய ஹாக்கி குழுவிற்காக ‘ஜெய்ஹிந்த் இந்தியா’ என்ற பாடலை உருவாக்கியிருக்கிறார். இந்தப் பாடல் வரிகளைக் கவிஞர் கல்சார் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலில் பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான் நடிப்பது முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்தப் பாடலின் புரொமோ வெளியாகியிருக்கிறது.

இதில் ஷாருக்கானுடன், நயன்தாரா, டிரம்ஸ் சிவமணி, நீத்தி மோகன், ஸ்வேதா மோகன், ஷாஷா திரிபாதி ஆகியோரும் இணைந்திருக்கிறார்கள். அவர்களுடன் இந்திய ஹாக்கி வீரர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.