இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் களமிறங்க உள்ள ஓப்போ நிறுவனம்

 

இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் களமிறங்க உள்ள ஓப்போ நிறுவனம்

ஓப்போ நிறுவனம் கூடிய விரைவில் ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

பெய்ஜிங்: ஓப்போ நிறுவனம் கூடிய விரைவில் ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் சீன நிறுவனங்களின் ஆதிக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது எனலாம். இந்த நிலையில், மற்றொரு சீன நிறுவனமும் இந்த களத்தில் இறங்க திட்டமிட்டுள்ளது. ஓப்போ நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் டிவி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுதொடர்பாக வெளியாகவில்லை. ஆனால் 2020-ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலகட்டத்தில் முதல் ஓப்போ ஸ்மார்ட் டிவி மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ttn

ஓப்போவின் ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் சியோமி, ஒன்பிளஸ், மோட்டோரோலா மற்றும் நோக்கியா டிவி போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சியோமி தவிர மற்ற நிறுவனங்கள் அனைத்தும் ஸ்மார்ட் டிவி சந்தையில் புதிதாக களமிறங்கி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.