இந்திய ராணுவத்தின் பதிலடியில் 3 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்…..

 

இந்திய ராணுவத்தின் பதிலடியில் 3 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்…..

எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இந்திய ராணுவத்தின் பதிலடியில் 3 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்…..

எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் அடிக்கடி இந்திய நிலைகளை குறித்து தாக்குதல் நடத்துவது உண்டு. அதற்கு இந்தியாவும் பதிலடி கொடுப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. எவ்வளவுதான் அடிப்பட்டாலும் பாகிஸ்தான் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச்சூடு நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

எல்லை கட்டுப்பாட்டு பகுதி

இந்நிலையில், நேற்றும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. உரி மற்றும் ரஜ்ஜோரி செக்டாரில் பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியது. இதனையடுத்து இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. 

இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் டிவிட்டரில் பதிவு செய்து இருப்பதாவது: எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். காஷ்மீரில் நிலவும் ஆபத்தான சூழ்நிலையையிலிருந்து கவனத்தை திசை திருப்ப எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய ராணுவம் தொடர்ந்து துப்பாக்கிசூடு நடத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் கொடுத்த பதிலடியில் 5 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது என்று பதிவு செய்து இருந்தார்.

ஆனால் இந்திய வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.