இந்திய முஸ்லிம்கள் உண்மையான இந்தியர்கள்தான் என எப்போதுமே பா.ஜ.க. நம்புகிறது…

 

இந்திய முஸ்லிம்கள் உண்மையான இந்தியர்கள்தான் என எப்போதுமே பா.ஜ.க. நம்புகிறது…

இந்திய முஸ்லிம்கள் அனைவரும் உண்மையான இந்தியர்கள்தான என எப்போதுமே பா.ஜ.க. நம்புகிறது என தெலங்கானா பா.ஜ.க. எம்.எல்.சி. ராமசந்தர் ராவ் தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த சில தினங்களுக்கு முன் டிவிட்டரில், வங்கதேசத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வன்முறை தொடர்பான வீடியோவை, உத்தர பிரதேசத்தில் இந்திய போலீசாரின் முஸ்லிம் இனப்படுகொலை என்ற தலைப்பில் பதிவு செய்து இருந்தார். அந்த வீடியோ போலி என்பதை மக்கள் கண்டுபிடித்ததையடுத்து அந்த வீடியோவை இம்ரான்கான் நீக்கவிட்டார். இம்ரான் கானின் அந்த பதிவுக்கு, இந்திய முஸ்லிம்கள் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம் என ஏ.ஐ.எம்.ஐ.எம். நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி பதிலடி கொடுத்து இருந்தார்.

இம்ரான் கான்

அசாதுதீன் ஓவைசி கருத்து குறித்து தெலங்கானா பா.ஜ.க. எம்.எல்.சி. ராமசந்தர் ராவ் கூறியதாவது: இந்திய முஸ்லிம்கள் அனைவரும் உண்மையான இந்தியர்கள்தான் என பா.ஜ.க. எப்போதுமே கருதுகிறது என ஓவைசி கட்டாயம் சிந்திக்க வேண்டும். ஏனென்றால் நாடு பிரிக்கப்பட்ட போது அங்கு அவர்கள் செல்ல வாய்ப்பு இருந்தது ஆனால் அவர்கள் போகவில்லை. இந்தியாவில் இருக்க அவர்கள் முடிவு செய்தனர். அதனால் ஓவைசியின் அறிக்கையில் புதிதாக ஒன்றும் இல்லை.

அசாதுதீன் ஓவைசி

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்ன சொன்னார்களோ அதைதான் ஓவைசி மறுபடியும் கூறியுள்ளார். அதேசமயம் இன்று வரை மத்திய அரசுக்கு எதிராக முஸ்லிம்களை அவர் தூண்டி விடுகிறார். தற்போது குடியுரிமை திருத்த சட்டம் வந்துள்ளது, அவர்கள் தங்கள் கையில் தேசிய கொடியை ஏந்துகிறார்கள், தேசிய கீதத்தை பாடுகிறார்கள். அதனை நாங்கள் வரவேற்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.