இந்திய முதல்வர்களின் முன்னோடி கருணாநிதி

 

இந்திய முதல்வர்களின் முன்னோடி கருணாநிதி

 

kalaignar karunanidhi

1974 ம் ஆண்டுவரை சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் நமது நாட்டின் தேசிய கொடியை ஏற்றி ராணுவ மரியாதையை ஏற்றுக் கொள்ளும் உரிமை, மாநில கவர்னர்களுக்கு மட்டுமே இருந்து வந்தது. கலைஞர் கருணாநிதிதான் , அன்றைய இந்திய பிரதமரான இந்திராகாந்தி அவர்களிடம் பேசி சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்றும் உரிமையை மாநில முதல்வர்களுக்குத் தரவேண்டும் என்று வாதிட்டு பெற்று 1974 ஆகஸ்ட் 15 ம்தேதி சென்னை கோட்டையில் முதன் முதலாக தேசியக் கொடியை ஏற்றினார். அவரது முயற்சியினால் தான் இந்தியாவில் உள்ள எல்லா மாநில முதல்வர்களுக்கும் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றும் உரிமை கிடைத்தது.
ராஜாஜி, டி.பிரகாசம், ஓ.பி ராமசாமி ரெட்டியார், பி.எஸ் குமாரசாமி ராஜா, காமராஜர்,பக்தவத்சலம், அண்ணா துரை, எம்ஜிஆர், ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய பதினொரு முதல்வர்களின் ஆட்சிக் காலத்தில் கருணாநிதி தொடர்ந்து அரசியல் செய்திருக்கிறார். இந்தியாவின் வேறு எந்த மாநில முதல்வருக்கும் இல்லாத தனி சிறப்பு இது.