இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இரு அணிகளும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இன்று பலப்பரீட்சை மேற்கொள்ள இருக்கின்றன.

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இரு அணிகளும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இன்று பலப்பரீட்சை மேற்கொள்ள இருக்கின்றன.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றதனால் தற்போது இந்த தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது. 

இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணி அளவில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி துவங்கயிருக்கிறது.

முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படு தோல்வியை தழுவிய இந்திய அணி, 2-வது போட்டியில் மீண்டு வந்து தவறுகளை சரிசெய்து நல்ல முன்னேற்றம் கண்டு வெற்றியையும் பெற்றது. 

team-india

வேகப்பந்து வீச்சில் நவ்தீப் சைனி உள்ளே எடுத்து வரப்பட்டதால், பந்துவீச்சில் இந்தியா சற்று பலம் மிக்கதாக காணப்படுகிறது. சுழற்பந்துவீச்சில் குல்தீப் மற்றும் ஜடேஜா இருவரும் நல்ல பங்களிப்பு அளித்ததால் இந்திய அணியால் வெற்றியை பெற முடிந்தது. 

சின்னசாமி மைதானம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்தாலும், சுழற்பந்து வீச்சுக்கு ஏதுவாக இருப்பதால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட்டுகளை வீழ்த்த நல்ல வாய்ப்புகள் இருக்கிறது. 

பெங்களூர் மைதானத்தில் சுழல்பந்து வீச்சாளர் சாஹலுக்கு அதிக அனுபவம் இருப்பதால், இன்றைய போட்டியில் குல்தீப் வெளியில் அமர்த்தப்பட்டு சாஹல் உள்ளே எடுத்து வர அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதேபோல, ரிஷாப் பண்ட் காயம் குறித்து இன்னும் முழுமையான அறிக்கை வெளிவராமல் இருப்பதால் அவர் இன்றைய போட்டியிலும் ஆட மாட்டார் என தெரிகிறது. 

chalahl

கடந்த இரண்டு போட்டிகளிலும் கீப்பிங் மற்றும் பேட்டிங் இரண்டிலும் கேஎல் ராகுல் அசத்தலாக செயல்பட்டதால் அவரே இன்றைய போட்டியிலும் கீப்பிங்கில் தொடர்வார் என தகவல்கள் வெளிவருகின்றன.

இன்றைய போட்டியில் பேட்டிங் மற்றும் சுழல் பந்து வீச்சு இரண்டிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணியை எளிதாக வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

டாஸ் வெல்வது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.