இந்திய பொருளாதாரத்தை மீட்க பிரதமர் மோடி என்னமந்திரம் வைத்திருக்கிறார்? – கே.எஸ். அழகிரி

இந்திய பொருளாதாரத்தை மீட்க பிரதமர் மோடி என்னமந்திரம் வைத்திருக்கிறார்? – கே.எஸ். அழகிரி

ஓலா,உபர் வாடகை கார்கள் பயன்பாட்டால் வாகன உற்பத்தி குறைவு என்பது திசைதிருப்பும் முயற்சியாகும் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ஓலா,உபர் வாடகை கார்கள் பயன்பாட்டால் வாகன உற்பத்தி குறைவு என்பது திசைதிருப்பும் முயற்சியாகும் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “ பொருளாதார மந்த நிலையை தடுக்கும் முயற்சிகளில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஈடுபடவேண்டும். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வரை வாகன உற்பத்தி மற்றும் வாகன உதிரி பாகங்களின் உற்பத்தி ஆகிய தொழில்கள் நல்ல வளர்ச்சியில் தான் இருந்தன. ஊபர், ஓலா போன்ற வாடகை கார்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த சரிவு ஏற்பட்டு இருக்கிறது என கூறுவது ஏற்புடையதல்ல, மத்திய நிதி அமைச்சருக்கு நோபல் பரிசு வழங்கலாம்.

KS Alagiri

நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. படித்த இளைஞர்களுக்கு தொழில் தொடங்க மத்திய அரசு கடன் உதவி வழங்கவில்லை. வங்கியில் கடன் வாங்கிக்கொண்டு தப்பித்துச் செல்கின்றனர் அதைப் பற்றியும் இந்த அரசு கவலைப்படுவதில்லை ” என்று கூறினார்.