இந்திய பங்குச்சந்தைகள் 1 சதவீதம் சரிவுடன் நிறைவு

 

இந்திய பங்குச்சந்தைகள் 1 சதவீதம் சரிவுடன் நிறைவு

இந்திய பங்குச்சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்றைய வர்த்தக நேர முடிவில் சரிவுடன் முடிவடைந்தன

மும்பை: இந்திய பங்குச்சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்றைய வர்த்தக நேர முடிவில் சரிவுடன் முடிவடைந்தன.

மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 300.37  (0.84%) புள்ளிகள் சரிந்து 35474.51 புள்ளிகளில் முடிவடைந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 107.20 (1.00%) புள்ளிகள் சரிந்து 10656.20 புள்ளிகளில் முடிவடைந்தது. நேற்று நடைபெற்ற ரிசர்வ் வங்கி நிர்வாகசபைக் கூட்டத்தின் முடிவுகளின் மீது முதலீட்டாளர்களின் அதிருப்தி காரணமாக பங்குச்சந்தை சரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்றைய வர்த்தகத்தில் 857 பங்குகள் உயர்வையும் 1,706 பங்குகள் சரிவையும் கண்டன. 150 பங்குகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச்சந்தையில் அதானி போர்ட் (+1.34%), மஹிந்த்ரா & மஹிந்த்ரா (+0.16%) 
நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து பங்கு வர்த்தக பட்டியலில் முதலிடங்களை பிடித்தன. விப்ரோ (-3.4%), Dr. ரெட்டி (-3.38%) நிறுவனங்களின்  பங்குகள் சரிந்து பட்டியலில் பின் தங்கின.

தேசிய பங்குச்சந்தையை பொறுத்தவரை,  ஜி.ஏ.ஐ.எல் GAIL (+2.79%), அதானி போர்ட் (+1.34%), மஹீந்த்ரா & மஹீந்த்ரா (+0.16%) நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து பங்கு வர்த்தக பட்டியலில் முதலிடங்களை பிடித்தன. யெஸ் வங்கி (-6.2%), விப்ரோ (-3.4%), Dr. ரெட்டி (-3.38%) நிறுவனங்களின் பங்குகள் சரிந்து பட்டியலில் பின் தங்கின.