இந்திய துணைக்கண்ட ஆப்கன் தலைவர் சுட்டுக் கொலை ! ஆப்கனுடன் இணைந்து அமெரிக்கா அதிரடி !

 

இந்திய துணைக்கண்ட ஆப்கன் தலைவர் சுட்டுக் கொலை ! ஆப்கனுடன் இணைந்து அமெரிக்கா அதிரடி !

அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் இந்திய துணைக் கண்டத்தின் தலைவர் மவுலானா அசிம் உமர் கொல்லப்பட்டதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் இந்திய துணைக் கண்டத்தின் தலைவர் மவுலானா அசிம் உமர் கொல்லப்பட்டதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

afghan

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் பகுதியைச் சேர்ந்த உமர். சனாவுல் ஹக் மற்றும் சன்னு என்ற பெயர்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தவர். 2018ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று தீவிரவாதப் பயிற்சி மேற்கொண்ட மவுலானா அசிம் உமர் பல்வே தாக்குதலுக்கு காரணமானவர். சர்வதேச அளவில் தேடப்படும் தீவிரவாதியாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட அசிம் உமர் இந்தியாவில் அல்கொய்தாவை அமைப்பை வளர்க்கவும் சதித்திட்டங்களை தீட்டவும் அல்கொய்தா தலைவர் அல் ஜவாரியால் நியமிக்கப்பட்டவர் மவுலானா அசிம் உமர். இந்நிலையில் மெக்கா செல்வதாக பணத்துடன் வீட்டை விட்டு போய், 14 ஆண்டுகளாக காணாமல் போய் இருந்தார் அசிம் உமர்.

இந்தியா, வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் போராளிகளைத் தூண்ட முயற்சியாக அல்கொய்தாகவின் கிளை 2014 ஆம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்டது. இந்த இயக்கத்தை வழிநடத்த உருவாக்கப்பட்டவர் தான் உமர்.

 

இந் நிலையில் ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா தீவிரவாதிகளை கூண்டோடு ஒழிப்பதற்காக ஆப்கானிஸ்தான் ராணுவத்துடன் அமெரிக்க படையினர் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். ஹெல்மண்ட் மாகாணத்தின் மூசா காலா மாவட்டத்தில் செப்டம்பர் 22 மற்றும் செப்டம்பர் 23ம் தேதி இரவுகளில் அல்கொய்தா தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்க படை நடத்திய தாக்குதலில் அசிம் உமர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் கடந்த செப்டம்பர் மாதம் கொல்லப்பட்டதற்கான தகவலை அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தி உள்ளது.