இந்திய தலைவர்கள் பாக்., வான் வழியே செல்ல தடை: இந்தியா கண்டனம்!

 

இந்திய தலைவர்கள் பாக்., வான் வழியே செல்ல தடை:  இந்தியா கண்டனம்!

பிரதமர் மோடி வரும் 21 ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருக்கிறார். இதன் காரணமாக மோடி செல்ல இருக்கும்  சிறப்பு விமானம் பாகிஸ்தான் வான் பரப்பின் வழியே செல்ல அனுமதி கேட்கப்பட்டது.

புதுடெல்லி:  சிறப்பு விமானத்தில் பாகிஸ்தான் வான் பரப்பின் வழியே  பிரதமர் மோடி பயணிக்க  அனுமதி மறுத்திருப்பதற்கு, இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

modi

பிரதமர் மோடி வரும் 21 ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருக்கிறார். இதன் காரணமாக மோடி செல்ல இருக்கும்  சிறப்பு விமானம் பாகிஸ்தான் வான் பரப்பின் வழியே செல்ல அனுமதி கேட்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த  அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, பிரதமர் மோடி செல்ல அனுமதி அளிக்க மாட்டோம் எனத் திட்டவட்டமாகக் கூறினார். 

raveesh

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள  இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ்குமார், இந்திய தலைவர்களின் சிறப்பு விமானங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். 

modi

முன்னதாக  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுவிட்சர்லாந்து சென்றபோதும், அவரது சிறப்பு விமானத்துக்குப் பாகிஸ்தான் அனுமதி மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.