இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ரஷ்ய அதிபர் பிரத்தியேக சுதந்திர தின வாழ்த்து!!

இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ரஷ்ய அதிபர் பிரத்தியேக சுதந்திர தின வாழ்த்து!!

இந்தியாவின் 73வது சுதந்திர தினத்திற்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் பிரத்தியேகமாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ரஷ்ய அதிபர் பிரத்தியேக சுதந்திர தின வாழ்த்து!!

ஒட்டுமொத்த இந்திய நாடே ஆகஸ்ட் 15 ஆம் தேதியான இன்று 73வது சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் கவர்னர்கள் மற்றும் முதலமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினர்.

இந்தியாவின் 73வது சுதந்திர தினத்திற்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் பிரத்தியேகமாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த இந்திய நாடே ஆகஸ்ட் 15 ஆம் தேதியான இன்று 73வது சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் கவர்னர்கள் மற்றும் முதலமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினர்.

டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இந்தியாவின் தேசிய கொடியான மூவர்ணக் கொடியை ஏற்றிய பிறகு சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி நாட்டுப்பற்று மற்றும் தேசத்திற்க்காக பாடுபட்ட வீரர்களை நினைவு கொள்ளவேண்டிய தருணம் இது என்று கூறினார்.

அதேநேரம் அவரது உரையில் தண்ணீர் பஞ்சம் குறித்தும் பேசப்பட்டிருந்தது. அதில் குறிப்பாக, தண்ணீர் பஞ்சம் குறித்து திருவள்ளுவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தனது குறளில் எடுத்துரைத்தார் என மேற்கோளிட்டு பேசியது தமிழர்களின் வரவேற்பை பெற்றது.

தனது உரையை முடித்து விட்டேன் கீழே இறங்கி வந்து அருகில் இருந்த சிறுவர்களிடம் உரையாடிவிட்டு செங்கோட்டையில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் இந்தியாவின் இந்த 73வது சுதந்திர தினத்திற்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் இந்தியாவின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கடந்த சில வருடங்களாக இந்திய மற்றும் ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு முன்பைவிட மென்மேலும் திடமாகியிருக்கிறது. பல ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.