இந்திய சந்தையில் மீண்டும் புதிய வடிவில் அம்பாசிடர் கார் விரைவில் அறிமுகம் – வைரல் வீடியோ

 

இந்திய சந்தையில் மீண்டும் புதிய வடிவில் அம்பாசிடர் கார் விரைவில் அறிமுகம் – வைரல் வீடியோ

பிரபல அம்பாசிடர் கார் மீண்டும் புதிய வடிவில் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் ஆகவிருக்கிறது.

டெல்லி: பிரபல அம்பாசிடர் கார் மீண்டும் புதிய வடிவில் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் ஆகவிருக்கிறது.

பிரெஞ்ச் கார் உற்பத்தி நிறுவனமான பியூஜியாட் அம்பாசிடர் கார் பிராண்டை வாங்கியுள்ளது. மேலும் அம்பாசிடர் காரை புதிய வடிவில் அந்நிறுவனம் இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு வெளியிட உள்ள அம்பாசிடர் காரின் ரெண்டர் வீடியோ வெளியாகியுள்ளது. அடுத்த தலைமுறை அம்பாசிடர் கார் எப்படி இருக்கும் என்பதை வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் இந்திய சாலைகளை கம்பீரமாக ஆட்சி செய்த அம்பாசிடர், மாருதி 800 போன்ற தனித்துவமான கார்களின் உற்பத்தி சில வருடங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. புதிய நவீன கார்களின் ஆதிக்கம் இந்திய சந்தையில் உருவானது. கடந்த 1954-ஆம் ஆண்டில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்த லேண்ட்மாஸ்டர் என்ற பெயரில் வந்த மாடலே அம்பாசிடர் என பெயர் மாற்றப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்டது.

இந்திய குடும்பங்கள் மற்றும் அனைத்து அரசியல்வாதிகளின் மிக விருப்பமான காராக 1980 முதல் 2000 வரை பெரும்பாலானோரின் அங்கீகரிக்கப்பட்ட மாடலாக முடிசூடா மன்னனாக அம்பாசிடர் கார் விளங்கியது. ஆனால் சந்தையில் பெரும் வீழ்ச்சியை அடைந்து 2014-ஆம் ஆண்டு சந்தையிலிருந்து இந்தக் கார் மாடல் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.