இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்திற்கு இணையாக பணம் கேட்பதா? – ஸ்மிரிதி மந்தனா நறுக் பேட்டி

 

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்திற்கு இணையாக பணம் கேட்பதா? – ஸ்மிரிதி மந்தனா நறுக் பேட்டி

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக பெண்கள் கிரிக்கெட் அணியினர் சம்பளம் எதிர்பார்க்க முடியாது என ஸ்மிரிதி மந்தனா தெரிவித்துள்ளார்.

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக பெண்கள் கிரிக்கெட் அணியினர் சம்பளம் எதிர்பார்க்க முடியாது என ஸ்மிரிதி மந்தனா தெரிவித்துள்ளார்.

அண்மையில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான மத்திய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. இதில் ஏ பிளஸ் பிரிவில் இடம் பிடித்த கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளமாக ரூ.7 கோடியும், அதே போன்ற உயர் பிரிவில் இடம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ரூ.50 லட்சம் ரூபாயும் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டது. வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் சம்பளத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்றத்தாழ்வு இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

ttn

இதுகுறித்து முன்னணி இந்திய கிரிக்கெட் வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா பேசுகையில், “முதலில் ஆண்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கு கிடைக்கும் வருமானத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆண்கள் கிரிக்கெட் அதிக அளவில் வருமானம் ஈட்டுகிறது. ஆகவே, அவர்களுக்கு இணையாக பணம் கேட்பது நியாயம் கிடையாது. என்றைக்கு பெண்கள் கிரிக்கெட் போட்டிகளும் அதிக வருமானத்தை ஈட்டுகிறதோ அப்போது பெண்களின் சம்பள உயர்வுக்கு குரல் கொடுக்கும் முதல் நபராகவும் நானே இருப்பேன். நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டியதே அவசியம்” என்று கூறினார்.