இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வு!

 

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வு!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தவர் ரவி சாஸ்திரி. இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் இவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. ரவி சாஸ்திரி பயிற்சியில் இந்திய கிரிக்கெட் அணி 70 சதவீதத்துக்கும் மேல் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக வரலாற்று சிறப்பு மிக்க ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி, இரண்டு ஆசிய கோப்பை, உலகக்கோப்பை அரையிறுதி என அனைத்திலும் வெற்றி தான். இந்நிலையில் இந்திய தலைமை பயிற்சியாளருக்கான நேர்முகத்தேர்வு இன்று நடைபெற்றது. இந்த நேர்காணலில், மைக் ஹசன், டாம் மூடி, ராபின் சிங், லால்சந்த் ராஜ்புத், பில் சிம்மன்ஸ், ரவி சாஸ்திரி உள்ளிட்ட ஆறு பேர் பங்கேற்றனர். 

ravi

முன்னாள் கேப்டன் கபில் தேவ், அனுஸ்மான் கேக்வாத், சாந்தா ரங்கசாமி ஆகியோர் அடங்கிய மூவர் குழு நடத்திய இந்த நேர்காணலில், ரவிசாஸ்திரி மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இவருக்கான ஒப்பந்தம் வரும் 2021ல் இந்தியாவில் நடக்கும் டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை வரை நீடிக்கும்