இந்திய கடல் எல்லையில் பாகிஸ்தான் படகுகள்…. பி.எஸ்.எப். வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை…

 

இந்திய கடல் எல்லையில்  பாகிஸ்தான் படகுகள்…. பி.எஸ்.எப். வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை…

இந்திய கடல் எல்லையில் 2 பாகிஸ்தான் படகுகளளை சிறைப்பிடித்ததுடன் அந்த பகுதியில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளை இந்திய எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் அருகே ஹராமி நாலா கடற்கழிமுக பகுதி உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் கடல் எல்லை பகுதியில் அமைந்துள்ள இந்த பகுதி ஆழமற்ற மற்றும் சாந்தமான நீர்பகுதியாகும். நேற்று காலை 6.30 மணி அளவில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

பாகிஸ்தான் படகு

அப்போது ஒற்றை என்ஜின் கொண்ட 2 பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் மட்டும் அந்த பகுதியில் தனியாக நிற்பதை அவர்கள் பார்த்தனர். இதனையடுத்து அந்த படகுகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இருப்பினும் சந்தேகத்துக்குரிய அளவில் எந்த பொருட்களும் அதில் கிடைக்கவில்லை. இதனையடுத்து அந்த பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் படகு

கடந்த மே மாதத்தில் இந்த பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் படகை பாதுகாப்பு படை வீரர்கள் சிறைபிடித்தனர். அப்போது அந்த படகில் இருந்த பாகிஸ்தான் மீனவர் கடலுக்குள் குதித்து தப்பியோடியது குறிப்பிடத்தக்கது.