இந்திய உளவு அமைப்பான ‘ரா’ என்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு

 

இந்திய உளவு அமைப்பான ‘ரா’ என்னை கொல்ல சதி: இலங்கை அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு

இந்திய உளவு அமைப்பான ‘ரா’ என்னை கொல்ல சதி செய்தது என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்

கொழும்பு: இந்திய உளவு அமைப்பான ‘ரா’ என்னை கொல்ல சதி செய்தது என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இலங்கை அரசியல் தலைவர்கள் அடிக்கடி இந்திய உளவு அமைப்பான “ரா” மீது குற்றம் சாட்டுவது தொடர்ந்து நடந்து வருகிறது. 2015-ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்ததும் இந்திய உளவு அமைப்பு ‘ரா’ மீதுதான் ராஜபக்சே குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இலங்கை அதிபராக இருந்து வரும் மைத்ரிபால சிறிசேன, இந்திய உளவு அமைப்பான ‘ரா’ தன்னை கொலை செய்ய சதி செய்ததாகவும், பிரதமர் மோடிக்கு இதுகுறித்து தெரியாது எனவும் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், ‘ரா’ அமைப்பு எத்தகைய வழிகளில் தன்னை கொலை செய்ய முயற்சி செய்தது என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.

இலங்கையில் வாரம் தோறும் நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் சிறிசேன இத்தகைய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதனை கேட்டதும் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இந்தியா – இலங்கை இடையேயான உறவு இதனால் பாதிக்கப்படும் எனவும் உயர் அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.