இந்திய உணவு பொருட்கள் குறித்து வதந்தி: பேஸ்புக், கூகுள் கணக்கை முடக்க மத்திய அரசு நடவடிக்கை!

 

இந்திய உணவு பொருட்கள் குறித்து வதந்தி: பேஸ்புக், கூகுள் கணக்கை முடக்க மத்திய அரசு நடவடிக்கை!

சமூக வலைதளங்களில் உணவுப் பொருட்கள் குறித்து வெளியாகும் தவறான செய்திகளைத் தடுக்க வேண்டும் கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

புதுதில்லி: சமூக வலைதளங்களில் உணவுப் பொருட்கள் குறித்து வெளியாகும் தவறான செய்திகளைத் தடுக்க வேண்டும் கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் தரமற்ற உணவுப் பொருட்கள் அதிகம் இருப்பதாகச் சமூக வலைதளங்களில் தவறான வீடியோக்கள் பரப்பப்பட்டு வருவதாக  தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்திடம் உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் புகார் தெரிவித்துள்ளது.  சமீபகாலமாகச்  சமூக வலைதளங்களில் பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை போன்ற செய்திகள் வேகமாக பரவுகின்றன.

food

 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தகவல் தொழில்நுட்பத்துறை, ‘இந்தியாவில் கிடைக்கும் உணவுகளின் தரம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படும் செய்தி எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.  தவறாகப் பரப்பப்படும் செய்தி இந்தியாவின் நன்மதிப்பைக் குலைத்துவிடும். மக்களின் நம்பிக்கையைக் கெடுத்துவிடும்.  தவறான தகவல்களை பரப்பும் கணக்குகளை முடக்க வேண்டும் என கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளது.