இந்திய இஞ்சி, மசாலா டீ விற்று கோடீஸ்வரியான அமெரிக்கப் பெண்!

 

இந்திய இஞ்சி, மசாலா டீ விற்று கோடீஸ்வரியான அமெரிக்கப் பெண்!

தனது காரையே டீக்கடையாக்கி, இஞ்சி மசாலா கலந்த பக்தி டீ என்ற பெயரில் விற்பனையை துவக்கியிருக்கிறார். எப்போதும் எல்லாவற்றிலும் புதுமையை விரும்பும் அமெரிக்கர்களுக்கு பக்தி டீயின் மணமும் ருசியும் பிடித்துப்போக, காஃபிஷாப்களில் விற்பனை செய்யும் அளவுக்கு டீ விற்பனை சூடுபிடித்திருக்கிறது.

இந்தியாவுலேயே இருக்குற இந்தியர்களுக்கு நம்ம மரியாதை தெரிய மாட்டேங்குது. ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், ஃபேஸ்புக்கின் மார்க் சக்கர்பெர்க் என அமெரிக்க பெரும்தலைகள் எல்லாம் இந்தியா வந்துசென்றபிறகுதான் பெரிய உயரத்திற்கு சென்றதாக அவர்களே பதிவு செய்திருக்கிறார்கள். அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் பக்தி ச்சாய் என்ற பெயரில் அமெரிக்காவில் டீக்கடை நடத்தி கோடீஸ்வரியாகி இருக்கும் ப்ரூக் எட்டி! பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த ப்ரூக், ஆட்டோ சவாரி, கண்ணாடி கிளாஸ் டீ என இந்தியாவுக்கே உரிய அனைத்தையும் மகிழ்ச்சியாக அனுபவித்துவிட்டு அமெரிக்கா திரும்பியிருக்கிறார். ஆனால், அமெரிக்காவுக்கு திரும்பியபிறகும் அவருக்கு இந்திய டீ ஞாபகம் வரவே, எல்லா பக்கமும் அமெரிக்காவின் காடு மலை கடல் எல்லாம் சுத்தியிருக்கிறார் ஒரு நல்ல டீக்காக. எங்கேயும் தென்படவில்லை.

Brook Eddy enjoying her Tea

சடாரென மின்னல் வெட்டியிருக்கிறது அவரது மூளைக்குள். உடனடியாக தனது காரையே டீக்கடையாக்கி, இஞ்சி மசாலா கலந்த பக்தி டீ என்ற பெயரில் விற்பனையை துவக்கியிருக்கிறார். எப்போதும் எல்லாவற்றிலும் புதுமையை விரும்பும் அமெரிக்கர்களுக்கு பக்தி டீயின் மணமும் ருசியும் பிடித்துப்போக, காஃபிஷாப்களில் விற்பனை செய்யும் அளவுக்கு டீ விற்பனை சூடுபிடித்திருக்கிறது. ஒருகட்டத்தில் டீயில் கலக்க இஞ்சி தட்டுவதற்காக இரண்டு பெரிய மிஷின்களை இறக்குமதி செய்து, அதனை பயன்படுத்த இரண்டு பேரை வேலைக்கு வைக்கும் அளவுக்கு பிசியாகிவிட்டார் சாய்வாலா ப்ரூக். ஒருகட்டத்தில் அமெரிக்காவின் சிறந்த தொழில்முனைவோருக்கான முதல் ஐந்து பேரில் ஒருவராக தேர்வானார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தாண்டு மட்டும் எதிர்பார்க்கப்படும் வருமானம் 7 மில்லியன் டாலர்கள், அதாவது கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய்.