இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்டாகும் #தமிழ் வாழ்க ஹேஷ்டேக்!

 

இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்டாகும் #தமிழ் வாழ்க ஹேஷ்டேக்!

நாட்டின் ஒரே மொழியாக இந்தி என்ற இருக்க வேண்டும் என்ற கருத்தை எதிர்த்து #தமிழ்வாழ்க ஹேஷ்டாக் டிவிட்டரில் டிரெண்டாகியுள்ளது. 

நாட்டின் ஒரே மொழியாக இந்தி என்ற இருக்க வேண்டும் என்ற கருத்தை எதிர்த்து #தமிழ்வாழ்க ஹேஷ்டாக் டிவிட்டரில் டிரெண்டாகியுள்ளது. 

amit

இந்தி தினம்  இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரே நாடு, ஒரே மொழி என்ற தலைப்பில்  கருத்து வெளியிட்டிருந்தார். அதில், இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு, ஒவ்வொரு மொழிக்கும்  முக்கியத்துவம் உள்ளது.  ஆனால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பதே இந்தியாவுக்கான அடையாளம். இது உலகளவில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். அதனால்  இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது பலராலும் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்’ என்று தெரிவித்தார்.

hindi

அமித்ஷாவின் இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இதுகுறித்த வாதங்களும் சமூகவலைதளங்களில்  தீவிரமாக நடக்கிறது. 

இந்நிலையில் நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டிவிட்டரில்  #தமிழ்வாழ்க, #StopHindiImposition, StopHindiImperialism ஆகிய ஹேஷ்டேக்கள்  இந்திய அளவில் டிரெண்டாகியுள்ளன.