இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை பள்ளிகளில் கட்டாயம்! – கேரள அரசு அதிரடி

 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை பள்ளிகளில் கட்டாயம்! – கேரள அரசு அதிரடி

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை பள்ளி கூட்டத்தில் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பிக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை பள்ளி கூட்டத்தில் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பிக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

ttn

கேரள முதல்வர் பினராயி விஜயன் கோழிக்கோட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அவரிடம் மாணவர் சங்க நிர்வாகிகள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றிய விழிப்புணர்வை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து அவர்களிடம் பேசிய அவர், “பொது மக்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மாநில அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது.

ttn

இதன் ஒரு பகுதியாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் காலை கூட்டங்களில் படிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. கல்லூரி மாணவர் சங்கத்தில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. பல்கலைக் கழக நூலகங்களை வாரத்தின் எல்லா நாளும் 24 மணி நேரமும் திறந்து வைக்கவும் எந்த கட்டுப்பாடும் இன்றி பெண்கள் இந்த நூலகங்களை பயன்படுத்தவும் திட்டமிட்டு வருவதாக” அவர் கூறினார்.

ttn

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை என்பது இந்திய அரசியலமைப்பு பற்றிய அறிமுகத்தை அளிக்கிறது. அதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை. அதன் முகப்புரையானது, “இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை ஒரு இறையாண்மை வாய்ந்த, சமூகத்துவ நெறி சார்ந்த, மதச்சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைக்கவும், அதன் குடிமக்கள் அனைவருக்கும் சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் நீதியும், சிந்தனை வெளிப்பாட்டில் நம்பிக்கையும், பற்றார்வத்தில் மற்றும் வழிபாட்டில் சுதந்திரமும், தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில் சமத்துவமும், உறுதியாகக் கிடைக்கச் செய்யவும், தனி ஒருவரின் மாண்புக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் உறுதியளிக்கும் சகோதரத்துவத்தை அவர்கள் அனைவரிடையே வளர்க்கவும், விழுமிய முறைமையுடன் உறுதி பூண்டு, 1949, நவம்பர் இருபத்து ஆறாம் நாளாகிய இன்று நம்முடைய அரசியலைப்புக் பேரவையில்,இங்கிதனால், இந்திய அரசியலமைப்பை ஏற்று, சட்டமாக இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்” என்று சொல்கிறது.