இந்திய அணியில் விஜய் சங்கருக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்ப்பு!

 

இந்திய அணியில் விஜய் சங்கருக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்ப்பு!

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து தமிழக வீரர் விஜய் சங்கர் விலகினார்.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து தமிழக வீரர் விஜய் சங்கர் விலகினார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் தமிழக வீரர் விஜய் சங்கர் இடம்பெற்றிருந்தார். இந்த தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய விஜய் சங்கருக்கு பயிற்சியின் போது காலில் காயம் ஏற்பட்டதாக  கூறப்படுகிறது. இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில், விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் களமிறக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மற்ற போட்டிகளில் இருந்தும் விஜய் சங்கர் விலகியுள்ளார். விஜய் சங்கருக்கு பதிலாக கர்நாடகத்தை சேர்ந்த மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசி அறிவித்துள்ளது.  

கடந்தாண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. அந்த தொடரில் ப்ரித்விஷா காயமடைந்ததால் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டார்.