இந்திய அணியில் இருந்து தோனி ஓரங்கட்ட தயாரானது தேர்வுக்குழு..? கடும் கோவத்தில் ரசிகர்கள் !!

இந்திய அணியில் இருந்து தோனி ஓரங்கட்ட தயாரானது தேர்வுக்குழு..? கடும் கோவத்தில் ரசிகர்கள் !!

தோனி தானாக ஓய்வு பெறாவிட்டால் அடுத்தடுத்த தொடர்களில் இருந்து அவரை ஓரங்கட்ட தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
கிரிக்கெட்டில் உப்புமா கிண்டி கொண்டிருந்த இந்திய அணியை, கிரிக்கெட் உலகின் வல்லரசாக்கியவர் முன்னாள் கேப்டன் தோனி தான் என்றால் அது மிகையாகாது. 

dhoni

இந்திய அணிக்கு மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று ஒரே கேப்டனான தோனி, கடந்த மூன்று வருடத்திற்கு தானாக முன்வந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விராட் கோஹ்லியின் தலைமையில் சாதரண ஒரு வீரராக விளையாடி வருகிறார். 
கேப்டனாக இல்லாவிட்டாலும், நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை இந்திய அணியில் மிக முக்கிய பங்காற்றிய தோனி, இந்த உலகக்கோப்பையுடன் ஓய்று பெற்று விடுவார் என்றே கருதப்பட்ட நிலையில் தோனி இதுவரை தனது ஓய்வு முடிவு குறித்து வாய் திறக்கவில்லை, தோனி ஓய்வு  குறித்த கேள்விக்கு பதிலளித்த விராட் கோஹ்லி தோனி இதுவரை அதுபற்றி எதுவும் கூறவில்லை என்றே பதிலளித்திருந்தார். 

dhoni

இதனால் தோனி 2020 டி.20 உலகக்கோப்பை வரை இருப்பாரோ என ரசிகர்கள் பகல் கனவு காண துவங்கிவிட்ட நிலையில், தோனி தானாக முன்வந்து ஓய்வு பெற்று கொள்ள வேண்டும் என இந்திய தேர்வுக்குழு மறைமுகமாக எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
தோனி குறித்து இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே பிரசாத் கூறியதாக வெளியாகியுள்ள ஒரு தகவலில், தோனி தானாக முன்வந்து ஓய்வு அறிவித்துவிட வேண்டும். அவரால் 2020ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை விளையாட முடியாது என்பது அனைவருக்கு தெரியும். அதனால் தோனி விரைவாக ஓய்வு பெற்றுவிட வேண்டும். ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்கள் பலர் காத்து கிடக்கின்றனர்” என்று கூறியுள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கிறது. 

dhoni

எம்.எஸ்.கே பிரசாத் கூறியதாக சொல்லப்படும் இந்த தகவல் குறித்தான அதிகாரப்பூர்வ பேட்டி எதுவும் வெளியாவில்லை என்றாலும், பெரும்பாலான ஆங்கில ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளதால் தோனியின் ரசிகர்கள் செம கடுப்பில் உள்ளனர்.