இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி: ஆறு பேர் கொண்ட இறுதிப்பட்டியல் வெளியீடு

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி: ஆறு பேர் கொண்ட இறுதிப்பட்டியல் வெளியீடு

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில், இறுதி சுற்றில் பங்கேற்க இருக்கும் 6 பேர் கொண்ட பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி: ஆறு பேர் கொண்ட இறுதிப்பட்டியல் வெளியீடு

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடர் முடிவுற்ற உடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. உலக கோப்பை தொடருக்கு பிறகு உடனடியாக மேற்கிந்திய தீவுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்ததால் இவர்களின் பதவிக்காலம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில், இறுதி சுற்றில் பங்கேற்க இருக்கும் 6 பேர் கொண்ட பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடர் முடிவுற்ற உடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. உலக கோப்பை தொடருக்கு பிறகு உடனடியாக மேற்கிந்திய தீவுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்ததால் இவர்களின் பதவிக்காலம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இதற்கு இடைப்பட்ட காலங்களில் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ அறிவிப்பு விடுத்தது.

இதற்காக பலரும் விண்ணப்பித்திருந்தனர். இப்பதவிக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 ஆம் தேதி கடைசிநாள் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 2ஆம் தேதி விண்ணப்பித்தவர்களில் பட்டியலையும் பிசிசிஐ வெளியிட்டது. 

முதல் இரண்டு சுற்றுகள் முடிவு பெற்று தற்போது தகுதி அடிப்படையில் இறுதி சுற்றிற்கு பங்கேற்க 6 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டிருந்தது.

தற்போது இப்பதவியில் இருக்கும் ரவிசாஸ்திரி மீண்டும் இதே பதவிக்கு வர விரும்பினால், நேரடியாக இறுதி சுற்றில் பங்கேற்கலாம் எனவும் பிசிசிஐ தெரிவித்திருந்தது. அதனால் அவரும் இறுதிச்சுற்றுக்காக விண்ணப்பித்திருந்தார்.

தற்போது ரவி சாஸ்திரி உட்பட ஆறு பேர் கொண்ட பட்டியலில் ராபின் சிங், லால்சந்த் ராஜ்புட் மற்றும் ரவி சாஸ்திரி ஆகிய மூவரும் இந்தியர்களாவர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாம் மூடி நியூசிலந்தை சேர்ந்த மைக் ஹசன், ஆப்கானிஸ்தான் முன்னாள் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 

இவர்களுக்கு இவ்வார இறுதியில் நேர்காணல் நடைபெறுகிறது. இவர்களை கபில்தேவ் தலைமையிலான குழுவினர் தேர்வு செய்வர். இறுதி முடிவு நேர்காணல் முடிந்த ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.