இந்திய அணியால் விராட்கோலிக்கு தலைவலி வரப்போகிறது – ரோகித் சர்மா பேட்டி!

இந்திய அணியால் விராட்கோலிக்கு தலைவலி வரப்போகிறது – ரோகித் சர்மா பேட்டி!

தற்போது இருக்கும் இந்திய அணியால் கேப்டன் விராட் கோலிக்கு தலைவலி வரப்போகிறது என ரோகித் சர்மா பேட்டி அளித்துள்ளார். 

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் கட்டமாக ஆடியது. இதில் முதல் போட்டியில் துரதிஸ்டவசமாக, இந்திய அணி தோல்வியை தழுவியது. இரண்டாவது போட்டியில் ரோகித் சர்மாவின் அதிரடியால் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. 

ind vs ban

இந்நிலையில் நேற்று நாக்பூரில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 52(35) ஷ்ரேயாஸ் ஐயர் ரன்களும் 62(33) ரன்களும் எடுத்தனர். அடுத்ததாக பேட்டிங் செய்ய வந்த வங்கதேச அணிக்கு நைம் 81(48) ரன்கள் எடுத்தார். 

ஒரு கட்டத்தில் 110/2 என வலுவான நிலையில் இருந்தது. அப்போது பந்துவீச வந்த தீபக் சஹர் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டம் காட்டினார். இப்போட்டியில் தீபக் சஹர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி, 7 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை எடுத்து டி20 போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார். இறுதியாக, இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

rohit sharma

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 தொடரை கைப்பற்றியது. 

போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த ரோகித் சர்மா கூறுகையில், இந்திய டி20 அணியில் சிறப்பாக ஆடி வரும் கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் சஹார் ஆகியோரும், ஓய்வில் இருக்கும் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஜடேஜா ஆகியோரும் மீண்டும் அணிக்கு திரும்ப இருக்கின்றனர். இதனால் இந்திய அணி தேர்வாளர்களுக்கும் கேப்டன் விராத் கோலிக்கும் 2020 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது, யாரை அணியில் எடுப்பது? யாரை வெளியேற்றுவது? என்பதில் பெரும் தலைவலி காத்திருக்கிறது என்றார்.