‘இந்திய அணிக்கு நீங்கள் தேவை; ஓய்வு குறித்து யோசிக்க வேண்டாம்’ : தோனிக்கு வேண்டுகோள் விடுத்த பிரபல பாடகி!

 

‘இந்திய அணிக்கு நீங்கள் தேவை; ஓய்வு குறித்து யோசிக்க வேண்டாம்’ :  தோனிக்கு வேண்டுகோள் விடுத்த பிரபல பாடகி!

உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது.

மும்பை:  இந்திய அணிக்கு தோனி தேவைப்படுகிறார். அதனால் அவர் ஓய்வு முடிவை அறிவிக்கக்கூடாது என்று பிரபல திரைப்பட பாடகி லதா மங்கேஷ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

dhoni

உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. இருப்பினும் அரை சதம் அடித்து கடைசியாகப் போராடிய தோனிக்கு ஆதரவாக  #ThankYouMSD என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது.   அத்துடன் சிலர் அவரின் ஓய்வு குறித்தும் செய்திகள் வெளியாகின. 

 

இந்நிலையில் பிரபல திரைப்பட பாடகி லதா மங்கேஷ்கர்  தோனி தனது ஓய்வு முடிவை அறிவிக்கக் கூடாது என்று தனது டிவிட்டரில் அறிவித்துள்ளார். அதில், ‘தோனிஜி, நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்கப் போகிறீர்கள் என்று தகவல் வருவதை நான் சில நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அது குறித்து யோசித்துக் கொண்டிருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள்.  உங்களுடைய ஆட்டம் இந்திய அணிக்கு தேவைப்படுகிறது.அதனால் நீங்கள் ஓய்வு குறித்து யோசிக்க வேண்டாம்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

 

மேலும் தான் பாடிய பாடல் ஒன்றை இந்திய அணிக்காக அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.