இந்தியைத் திணிக்கும் பாஜக! அதிருப்தியில் முதல்வர்

 

இந்தியைத் திணிக்கும் பாஜக! அதிருப்தியில் முதல்வர்

இந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்த உயர் அதிகாரிகளை மட்டுமே மத்திய அரசு நியமித்து வருவதால் நிர்வாகத்தில் நடைமுறை சிக்கல் ஏற்படுவதாக புதுவை முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெற்று வருகிறது.

இந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்த உயர் அதிகாரிகளை மட்டுமே மத்திய அரசு நியமித்து வருவதால் நிர்வாகத்தில் நடைமுறை சிக்கல் ஏற்படுவதாக புதுவை முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெற்று வருகிறது. இந்த விவாதத்தில், காவல் துறை, அச்சுத்துறை, ஓய்வு அணுகூலங்கள், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகள் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தின் சாதக பாதங்கள் குறித்து எம்எல்ஏக்களுடன் கலந்தாலோசித்து தான் முடிவெடுக்க முடியும் என தெரிவித்தார்.  

narayanasamy

தொடர்ந்து கேள்விகளுக்கு பதிலளித்த அவர், புதுச்சேரியில் தமிழ் தெரிந்தவர்களை மட்டுமே உயரதிகாரிகளாக நியமிக்க மத்திய அரசிடம் தான் வலியுறுத்தியதாகவும், ஆனால் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த அதிகாரிகளை மத்திய அரசு நியமித்திருப்பதால் நிர்வாக சிக்கல் ஏற்படுவதாகவும், இந்நிலையை போக்க தமிழ் தெரிந்த அதிகாரிகளை அதிகப்படியாக நியமிக்கும்படி மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் எனவும் கூறினார்.