இந்தியில் தயாராகும் ஒத்த செருப்பு!

 

இந்தியில் தயாராகும் ஒத்த செருப்பு!

பார்த்திபன் இயக்கத்தில் தமிழில் வெளியான ஒத்த செருப்பு இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. 

இயக்குநரும்  நடிகருமான பார்த்திபனின் சமீபத்திய படைப்பு ஒத்த செருப்பு சைஸ் நம்பர் 7. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதை அமைத்து இந்தப் படத்தை இயக்கினார் பார்த்திபன். இப்படத்தைக் கண்ட அனைவரும் இந்திய சினிமாவில் இதுவரை எவரும் கையாளாத பெரும் முயற்சி இது என்று பாராட்டினர். இந்த படம் Golden globe-க்கான விருதை வென்றது. ஆஸ்கர் விருது பரிந்துரையில் இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதற்கு பதில் Gully Boy இடம்பிடித்திருந்தது. இந்நிலையில் ஒத்த செருப்பு படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதை இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் உறுதி செய்துள்ளார். 

 

 

இதுகுறித்து நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், “Os7-ஐ ஹிந்தியில் நவாஸுதீன் சித்திக்கை ‘வச்சி செய்ய’ இருக்குறோம். அதற்கான பேச்சு வார்த்தையின் போது…. என தயாரிப்பாளர்களில் ஒருவரான ரமேஷ் உடன்” என பதிவிட்டுள்ளார். மேலும் நவாஸீதீன் மற்றும் தயாரிப்பாளர் உடனான புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.