இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டி: இரண்டாவது நாளின் நிலை என்ன?

 

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டி: இரண்டாவது நாளின் நிலை என்ன?

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 94 ரன்களுடன் களத்தில் உள்ளது.

ராஜ்கோட்: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 94 ரன்களுடன் களத்தில் உள்ளது. 

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் பிரித்வி ஷா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோரின் சதத்தாலும், புஜாரா, ரிஷப் பந்த் ஆகியோரின் அரைசதத்தாலும் இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

அடுத்து வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்கியது. கிரேக் பிராத்வைட், பொவேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதன்பின் வந்த ஷாய் ஹோப்பும், ஷிம்ரோனும் தலா 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சுனில் அம்ப்ரிஸ் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். வெஸ்ட் இண்டிஸ் 74 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது.

அதனையடுத்து, 7-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரோஸ்டன் சேஸுடன் கைகோர்த்த கீமோ பால், 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 94  ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம், தற்போது வரை இந்திய அணியை விட 555 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இருப்பது குறிப்பிடத்தக்கது.