இந்தியா வருகிறார் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்!

 

இந்தியா வருகிறார் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்!

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு வர வேண்டும் என பல்வேறு முறை பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். கடந்த ஆண்டே குடியரசு தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக ட்ரம்ப்  பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் இந்தியா வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

modi-with-trump

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு வர வேண்டும் என பல்வேறு முறை பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். கடந்த ஆண்டே குடியரசு தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக ட்ரம்ப்  பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ட்ரம்ப் வரவில்லை. இந்த நிலையில் அடுத்த மாதம் ட்ரம்ப் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இவ்வாரம் டெல்லிக்கு வந்து ட்ரம்பின் பயணத்துக்கு தேவையான ஏற்பாடுகள் செய்ய இருப்பதாகத் தெரிகிறது. இரு நாட்டு தூதரக அதிகாரிகளும் ட்ரம்ப் பயணம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சந்திப்பின் போது வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனச் சொல்லப்படுகிறது.