இந்தியா-வங்கதேச தொடர்: மோடியை சிறப்பு விருந்தினராக அழைக்க கங்குலி திட்டவட்டம்..!

இந்தியா-வங்கதேச தொடர்: மோடியை சிறப்பு விருந்தினராக அழைக்க கங்குலி திட்டவட்டம்..!

இந்தியா வங்கதேச அணிகள் மோதும் டி20 தொடரில் மோடியை சிறப்பு விருந்தினராக அழைக்க கங்குலி திட்டம் தீட்டி வருகிறார்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய டி20 தொடர் சமனில் முடிவடைந்தது. இதனையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3 போட்டிகளையும் கைப்பற்றி தென்னாப்பிரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்தது. டெஸ்ட் அரங்கில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா ஒயிட் வாஷ் செய்தது இதுவே முதல் முறையாகும். 

india

தென்னாப்பிரிக்கா தொடரை அடுத்து இந்திய வங்கதேச அணிகள் மோதும் 3 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் அடுத்த மாதம் மூன்றாம் தேதி துவங்க இருக்கிறது. வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய வீரர்களை வருகிற 24-ஆம் தேதி பிசிசிஐ அறிவிக்க உள்ளது. 

வருகின்ற 23 ஆம் தேதி புதிய பிசிசிஐ தலைவராக பதவியேற்க உள்ள கங்குலி பல அதிரடி திட்டங்களை அமல்படுத்த தற்போது இருந்தே திட்டமிட்டு வருகிறார். மேலும் கிரிக்கெட் போட்டிகளுக்கு அரசியல் ஆதரவையும் தேடி வருவதாக தகவல்கள் வந்தவண்ணம் இருந்தது. அதற்கு ஏற்றார்போல், இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் கிரிக்கெட் தொடருக்கு பிரதமர் மோடியை அழைக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

ganguly

ஏற்கனவே இந்தியா வங்கதேச அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியை வங்கதேச பிரதமர் பார்வையிட இருப்பதாக செய்திகள் வருகின்றன. 

இதற்கிடையில் வங்கதேச வீரர்கள் அதன் கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதால் இந்த தொடர் நடக்குமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

-vicky