இந்தியா மேற்கிந்திய தீவுகள் இடையே முதல் டி20 இன்று: கோலி, தோனி இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி

 

இந்தியா மேற்கிந்திய தீவுகள் இடையே முதல் டி20 இன்று: கோலி, தோனி இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி

இந்தியா மேற்கிந்திய தீவுகள் இடையே முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது

கொல்கத்தா: இந்தியா மேற்கிந்திய தீவுகள் இடையே முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது

இரண்டு டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா வந்துள்ளது. அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில், இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே, முதலாவது 20ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில், கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் இறங்குகிறது. அதேபோல், தோனியும் நீக்கப்பட்டுள்ளார். எனவே, ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங்கில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் குணால் பாண்டியாவும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

முன்னதாக, ஒருநாள் போட்டிகளில் தோனி தன் கவனத்தை இன்னும் கூர்மையாக்கவும்,  2வது விக்கெட் கீப்பரை இப்போதே தயார்ப்படுத்தவும் டி20 சுமையிலிருந்து அவர் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, தோனி நீக்கப்பட்டதற்கு அவரது ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அவரது நீக்கத்திற்கு தான் காரணமல்ல. அணியின் தேர்வுக்குழுவினர் முடிவே இது. இளம் வீரர்களுக்கு அவர் உதவியுள்ளார் என விராட் கோலி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.