இந்தியா மிகப்பெரிய மாற்றங்களை செய்து வருகிறது: பிரதமர் மோடி பெருமிதம்

 

இந்தியா மிகப்பெரிய மாற்றங்களை செய்து வருகிறது: பிரதமர் மோடி பெருமிதம்

டிஜிட்டல் கட்டமைப்பில் இந்தியா மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது என பிரதமர் மோடி ஜப்பானில் பேசியுள்ளார்.

டோக்கியோ: டிஜிட்டல் கட்டமைப்பில் இந்தியா மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது என பிரதமர் மோடி ஜப்பானில் பேசியுள்ளார்.

இந்தியா – ஜப்பான் இடையிலான, 13-வது ஆண்டு மாநாடு, இரண்டு நாட்கள் நடக்க இருக்கிறது. இதற்காக பிரதமர் ஜப்பான் சென்றுள்ளார். அந்நாட்டின் தலைநகர் டோக்கியோ நகரில் ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் மோடி பேசுகையில், தீபாவளி வெளிச்சம் போல் இந்தியர்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்கள். வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறார்கள். டிஜிட்டல் கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களை இந்தியா ஏற்படுத்தி வருகிறது.

உலக அடையாளமாக மாறியுள்ள ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் இந்தியா மட்டுமன்றி உலக நாடுகளும் பொருட்களை தயாரிக்கின்றன. இந்துக்களோ, புத்த மதத்தை சேர்ந்தவர்களோ நமக்கு ஒன்றுதான். இந்துக்கடவுள்களை ஜப்பானியர்கள் வணங்குகின்றனர். சேவை என்ற சொல் ஜப்பானிலும், இந்தியாவிலும் ஒன்றுதான் என பேசினார்.