இந்தியா – பிரான்ஸ் உறவில் சிக்கல்: பிரான்ஸ் அரசு அச்சம்

 

இந்தியா – பிரான்ஸ் உறவில் சிக்கல்: பிரான்ஸ் அரசு அச்சம்

இந்தியா – பிரான்ஸ் நாடுகளிடையேயான உறவில் சிக்கல் ஏற்படுமோ என பிரான்ஸ் அரசு அச்சம் தெரிவித்துள்ளது

பாரிஸ்: இந்தியா – பிரான்ஸ் நாடுகளிடையேயான உறவில் சிக்கல் ஏற்படுமோ என பிரான்ஸ் அரசு அச்சம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் – இந்தியா இடையேயான ரஃபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் தொடர் குற்றச் சாட்டுகளை முன் வைத்து வந்தார். ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு அதனை திட்டவட்டமாக மறுத்து வந்தது.

ஆனால், ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் விதமாக ரஃபேல் விமான ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்காக இந்திய நிறுவனமான அனில் அம்பானியின் நிறுவனத்தை இந்திய அரசுதான் பரிந்துரை செய்தது என பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே தெரிவித்துள்ளார். அவரது கருத்து மத்திய அரசுக்கு எதிராக பூதாகரமாக வெடித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியா – பிரான்ஸ் நாடுகளிடையேயான உறவில் சிக்கல் ஏற்படுமோ என பிரான்ஸ் அச்சம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஜீன் பாப்டிஸ்ட் லெமொய்ன் கூறுகையில், பதவியில் இல்லாத ஒருவரது சர்ச்சைக்குரிய பேச்சால் இந்தியா- பிரான்ஸ் இடையேயான உறவில் சிக்கல் ஏற்படுமோ என தங்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.