இந்தியா-பாகிஸ்தான் மோதும் உலகக்கோப்பை – கோடிகள் புழங்கும் விளையாட்டு : விட்டுக்கொடுக்குமா ஐசிசி ?

 

இந்தியா-பாகிஸ்தான் மோதும் உலகக்கோப்பை – கோடிகள் புழங்கும் விளையாட்டு : விட்டுக்கொடுக்குமா ஐசிசி ?

கடந்த மாதம் புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து தொடர்புகளையும் இந்தியா ரத்து செய்வதாக அறிவித்தது.  

கடந்த மாதம் புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து தொடர்புகளையும் இந்தியா ரத்து செய்வதாக அறிவித்தது.  

இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும் 

அது மட்டுமில்லாமல் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உள்பட அனைத்து வகையான விளையாட்டுகளையும் இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட கூடாது என்று முன்னாள் வீரர்கள் போர்க்கொடி தூக்கினர். பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசின் முடிவின்படி செயல்படுவோம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) கூறி இருந்தது. 

ind pak match

இந்நிலையில் ஒப்பந்தத்தின்படி உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.சி.சி.யின் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட்சன் கூறியதாவது:-

ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் பங்கேற்பது குறித்து அனைத்து நாட்டு உறுப்பினர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்தியிட்டு உள்ளனர். 2019 உலககோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அப்படி விளையாடமல் போவது விதிமுறைக்கு மாறானது. 

ind pak match

 
புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர்களின் குடும்பத்துக்கு உதவுவது அவசியமானது. நாங்கள் விளையாட்டுடன் அரசியலை கலக்க விரும்பவில்லை. இது ஐ.சி.சி. யின் தெளிவான குறிக்கோள் ஆகும். இந்தியா- பாகிஸ்தான் இடையேயான நேரடி போட்டித் தொடர் இருநாட்டு அரசுகள் மற்றும் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சம்மந்தப்பட்டது என்று கூறியுள்ளார். 

பணம் கொழிக்கும் விளையாட்டு 

உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் விளையாட்டை இந்த இரு நாடு ரசிகர்கள் மட்டுமன்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்து கண்டுகளிப்பார்கள். அதற்கு இரு அணி வீரர்களும் மைதானத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதும், வாக்குவாதங்களில் ஈடுபடுவதும் முக்கிய காரணம் ஆகும்.இந்திய பாகிஸ்தான் ரசிகர்கள் அதை விளையாட்டு மைதானத்தில் நடக்கும் ஒரு போராகவே கருதுவார்கள். இந்த காரணத்தினாலேயே இந்தியா-பாகிஸ்தான் மோதும் விளையாட்டுகளுக்கு தனி மவுசு உண்டு. கோடி கோடியாகப் பணம் புழங்கும் விவாகரம் அது. 

ind pak match

அந்த விளையாட்டுக்காகவே பிரத்யேக விளம்பரங்கள், விற்பனைகள் என வணிகம் கலை கட்டும்.  உலக கோப்பையில் இந்த இரு அணிகளும் மோதும் வாய்ப்பு அமையா விட்டால் இதெல்லாம் கெட்டுப்போய் விடுமே என்ற அச்சத்திலேயே ஒவ்வொரு முறையும் இந்தியா பாகிஸ்தான் நாடுகளை  ஒரே அணியிலேயே இடம் பெறச் செய்வார்கள். நிலைமை இப்படி இருக்க , உலகக்கோப்பையில் இந்த இரு அணிகளும் எப்படி மோதாமல் போவார்கள் ?