இந்தியா – பாகிஸ்தானுக்கு எதிராக பலத்தைக் காட்டும் மழை 

 

இந்தியா – பாகிஸ்தானுக்கு எதிராக பலத்தைக் காட்டும் மழை 

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி எப்பொழுதெல்லாம் நடக்கிறதோ அப்போதெல்லாம் உலகம் முழுக்கவே பரபரப்பு பற்றிக் கொள்கிறது. ‘உலகக் கோப்பை கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை.

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி எப்பொழுதெல்லாம் நடக்கிறதோ அப்போதெல்லாம் உலகம் முழுக்கவே பரபரப்பு பற்றிக் கொள்கிறது. ‘உலகக் கோப்பை கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை. ஆனால் இதில் ஜெயிக்க வேண்டும்’ என்று இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் வேண்டிக் கொண்ட காலங்கள் எல்லாம் உண்டு. ஆனால், இம்முறை இந்த இரு நாட்டு கிரிக்கெட் அணிகளுக்கும் எதிராக மழை தன்னுடைய பலத்தைக் காட்டுகிறது. நேற்று கிரிக்கெட் நடைப்பெறும் இடத்தில் மழை இல்லாதது ரசிகர்களிடையே மகிழ்ச்சியான செய்தியாய் இருந்தாலும், இன்று மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கணித்திருக்கிறது வானிலை அறிக்கை. 

இந்நிலையில், ஏன் உலகக் கோப்பை போட்டியை இங்கிலாந்தில் நடத்துகிறீர்கள்? என்று ஐசிசிக்கு எதிராக கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனங்களை எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.  வடக்கில் ஆர்க்டிக், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடல், கிழக்கில் ஐரோப்பா மற்றும் தெற்கில் ஆப்ரிக்க மழைக்காடுகள் சூழ்ந்திருப்பதால் இங்கிலாந்து ஒரு தீவு நாடு. அதனால், வெவ்வெறு பகுதிகளில் இருந்து வரும் பலதரப்பட்ட காற்று இங்கிலாந்து முழுவதும் வீசுவதால், இங்கிலாந்தில் வானிலையை சரியாக கணிக்க முடியாது. மழை வாய்ப்பு தள்ளியும் போகலாம் என்று பிரார்த்தனைகளைச் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

இன்றைய போட்டிக்கு தடை எதுவும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். ஆனால் தற்போது, போட்டி நடைப்பெற இருக்கும் மான்செஸ்டரில் மழை தான் இரு நாட்டு அணிகளுக்கும் பெரிய சவாலாக இருக்கிறது. இன்றைய கிரிக்கெட் போட்டியின் முடிவும் மழையின் கைகளில் தான் உள்ளது. முதலில் விளையாடும் அணி பெரிய ஸ்கோருடன் மேட்சை முடித்தால் தான் ஓவர்கள் குறைக்கப்பட்டாலும் வெற்றி தேவதனை ஆசிர்வதிப்பாள்.