இந்தியா – நியூசிலாந்து இடையேயான ஒருநாள் போட்டித் தொடர் நாளை தொடக்கம்

 

இந்தியா – நியூசிலாந்து இடையேயான ஒருநாள் போட்டித் தொடர் நாளை தொடக்கம்

இந்தியா – நியூசிலாந்து இடையேயான ஒருநாள் போட்டித் தொடர் நாளை தொடங்கவுள்ளது.

வெல்லிங்டன்: இந்தியா – நியூசிலாந்து இடையேயான ஒருநாள் போட்டித் தொடர் நாளை தொடங்கவுள்ளது.

இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. முதல் கட்டமாக ஒருநாள் போட்டி தொடர் நடைபெற உள்ளது. அத்தொடரின் முதல் போட்டி நேப்பியர் நகரில் நாளை நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி காலை 7.30. மணிக்கு இப்போட்டி தொடங்கும் .

இரு அணிகளும் பலம் வாய்ந்த இச்சூழலில், இத்தொடருக்கு முந்தைய தொடர்களில் நியூசிலாந்து இலங்கையையும், இந்தியா, ஆஸ்திரேலியாவையும் வென்றிருக்கின்றன.

நியூசிலாந்து சென்று 1976 முதல் 2014 வரை 7 ஒருநாள் போட்டி தொடர்களில் பங்கேற்றுள்ளது இந்திய அணி. அவற்றில் 1994 மற்றும் 1999ஆம் ஆண்டுகளில் தொடர்களை சமன் செய்தது. 1976, 1981, 2002 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் தொடர்களை இழந்த இந்திய அணிக்கு, 2009-ஆம் ஆண்டில் 3-1 என்ற கணக்கில் வெற்றி கிடைத்தது. நியூசிலாந்து மண்ணில் இதுவரை 30 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 18 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி “டை” யில் முடிந்துள்ளது. 2 போட்டிகள் முடிவு கிடைக்கவில்லை.

இவ்விரு அணிகளுக்கிடையே இதுவரை நடைபெற்றுள்ள 101 போட்டிகளில் இந்தியா 51 முறையும் நியூசிலாந்து 44 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் “டை” ஆனது 5 ஆட்டங்களில் முடிவு கிடைக்கவில்லை.

இத்தொடரில் பங்கேற்க உள்ள வீரர்கள் பட்டியல்

நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் பவுல்ட், பிரேஸ்வெல், காலின் டி கிரான்ட்ஹோம், பெர்குசன், மார்ட்டின் கப்தில், மாட் ஹென்றி, டாம் லாதம், காலின் முன்ரோ, ஹென்றி நிகோல்ஸ், மிட்செல் சான்ட்னெர், சோதி, டிம் சவுதி, ராஸ் டெய்லர்.

இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், டோனி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர்குமார், முகமது சிராஜ், கலீல் அகமது, முகமது ஷமி, விஜய் சங்கர், சுப்மான் கில்.

அட்டவணைகள் 

போட்டி – இடம் – நாள்

**முதல் ஒருநாள் – நேப்பியர் – ஜன. 23-ம் தேதி
**2-வது ஒருநாள் – மவுண்ட் மவுங்கானு – ஜன. 26-ம் தேதி
**3-வது ஒருநாள் – மவுண்ட் மவுங்கானு – ஜன. 28-ம் தேதி
**4-வது ஒருநாள் – மவுண்ட்  ஹாமில்டன் – ஜன. 31-ம் தேதி
**5-வது ஒருநாள் – மவுண்ட் வெலிங்டனி் – பிப். 3-ம் தேதி

அனைத்து போட்டிகளிலும் இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

டி-20 தொடர்:

போட்டி –   இடம் –   நாள்  –   நேரம் 

**முதல் ஆட்டம் – வெலிங்டன் –  பிப்.5 – 12.30 (மதியம்).
**இரண்டாம் ஆட்டம் – ஆக்லாந்து  –  பிப்.8 – 11.30 (காலை).
**மூன்றாம் ஆட்டம் – ஹாமில்டன்  –  பிப்.10 – 12.30 (மதியம்).

அனைத்துப் போட்டிகளிலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.