இந்தியா–தென்ஆப்பிரிக்கா தொடர்: ரசிகர்கள் யாரும் இல்லாமல் பூட்டிய மைதானத்திற்குள் போட்டிகள் நடத்த முடிவு

 

இந்தியா–தென்ஆப்பிரிக்கா தொடர்: ரசிகர்கள் யாரும் இல்லாமல் பூட்டிய மைதானத்திற்குள் போட்டிகள் நடத்த முடிவு

எஞ்சியுள்ள இரண்டு இந்தியா – தென் ஆப்பிரிக்கா ஒருநாள் போட்டிகளை ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய மைதானத்திற்குள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தா: எஞ்சியுள்ள இரண்டு இந்தியா – தென் ஆப்பிரிக்கா ஒருநாள் போட்டிகளை ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய மைதானத்திற்குள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி வருகிறது. இந்தியாவிலும் அதன் பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. விளையாட்டு அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. அந்த அமைச்சகங்களுடன்  கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டது.

இதையடுத்து, இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான மீதமுள்ள இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் பார்வையாளர்கள் உட்பட எந்தவொரு பொதுக்கூட்டமும் இல்லாமல் விளையாடப்படும் என்று பிசிசிஐ அறிவித்தது.

விளையாட்டு வீரர்கள் மற்றும் மதிப்புமிக்க ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பிசிசிஐ அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் மழை காரணமாக டாஸ் போடப்படாமலேயே கைவிடப்பட்டது.