இந்தியா தயாரிக்கும் ரேபிட் டெஸ்ட் கருவிகளை அரசு ஏன் வாங்கவில்லை: தருமபுரி எம்.பி ட்வீட்!

 

இந்தியா தயாரிக்கும் ரேபிட் டெஸ்ட் கருவிகளை அரசு ஏன் வாங்கவில்லை: தருமபுரி எம்.பி ட்வீட்!

ரேபிட் கிட் கருவி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும் அடுத்ததாக தமிழகத்துக்கு வந்து விடும் என்றும் தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகியும் இதற்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதுமட்டுமில்லாமல் கொரோனாவை கண்டறியும் சோதனையும் விரைவாக செய்யப்படவில்லை. தமிழகத்துக்கு வரவிருந்த கொரோனவை கண்டறியும் ரேபிட் கிட் கருவி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும் அடுத்ததாக தமிழகத்துக்கு வந்து விடும் என்றும் தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்தார்.

ttn

இந்நிலையில் இது குறித்து தருமபுரி எம்.பி செந்தில்குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் ரேபிட் கிட் கருவிகளை அரசு ஏன் வாங்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். அந்த பதிவில், “சீனாவில் இருந்து விரைவு சோதனை கிட் வரவில்லை. இந்தியாவில் ICMR அங்கிகாரம் பெற்ற புனே சார்ந்த லேப் Rapid test kit லட்ச கணக்கில் விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது. கேரளா அதை பயன்படுத்தி 2 மணி நேரத்தில் ரிசல்ட் குடுக்கும் சூழ்நிலையில், தமிழக அரசு ஏன் இதை ஆர்டர் செய்யவில்லை”. என்று குறிப்பிட்டுள்ளார்.