இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாபிரிக்கா டி20 மற்றும் டெஸ்ட் அணிகள் அறிவிப்பு!!

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாபிரிக்கா டி20 மற்றும் டெஸ்ட் அணிகள் அறிவிப்பு!!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கு பிறகு இந்திய அணி தென்னாபிரிக்கா  அணியுடன் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள்  தொடரில் ஆடுகிறது. இந்த தொடருக்கான அணியை தென்னாபிரிக்க கிரிக்கெட் வாரியம்  வெளியிட்டது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாபிரிக்கா டி20 மற்றும் டெஸ்ட் அணிகள் அறிவிப்பு!!

உலகக்கோப்பை தொடருக்கு பிறகு தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி செப்டம்பர் 15 முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் என 3 மொத்தம் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட இருக்கிறது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கு பிறகு இந்திய அணி தென்னாபிரிக்கா  அணியுடன் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள்  தொடரில் ஆடுகிறது. இந்த தொடருக்கான அணியை தென்னாபிரிக்க கிரிக்கெட் வாரியம்  வெளியிட்டது.

உலகக்கோப்பை தொடருக்கு பிறகு தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி செப்டம்பர் 15 முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் என 3 மொத்தம் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட இருக்கிறது. தற்போது இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. செப்டம்பர் முதல் வாரம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர் முடிவு பெரும். அதன் பிறகு நேரடியாக தென்னாபிரிக்க அணியுடன் மோதும். 

தென்னாபிரிக்க டி20 அணிக்கு டி காக் கேப்டன் பொறுப்பேற்கிறார். டெஸ்ட் அணிக்கு வழக்கம் போல டு பிளேஸிஸ் கேப்டன் பொறுப்பில் தொடர்கிறார்.

டி20 போட்டியில் பங்கேற்கும் தென்னாபிரிக்கா வீரர்களின் பட்டியல்: 

குயின்டன் டி காக் (கேப்டன்), ராஸ்ஸி வான் டெர் டஸ்ஸன், டெம்பா பவூமா, ஜூனியர் டாலா, ஜார்ன் ஃபார்ட்சூன், பெரான் ஹெண்ட்ரிக்ஸ், ரேஸா ஹெண்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், அன்ரிச் நார்ஜே, ஆண்டில் ஃபெலுவாயோ, டுவைன் ப்ரேடோரியஸ், ககிஸோ ரபாடா, டப்ரைஸ் ஷம்ஸி, ஜான்ஜான் ஸ்மட்ஸ். 

டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் தென்னாபிரிக்கா வீரர்கள் பட்டியல்:

ஃபாஃப் டூ ப்ளெஸிஸ் (கேப்டன்), டெம்பா பவூமா, தேனுஸ் டி ப்ரைன், குயின்டன் டி காக், டீன் எல்கர், ஸூபைர் ஹம்ஸா, கேஷவ் மஹாராஜ், எய்டன் மர்க்ராம், ஷெனுரன் முத்துசாமி, லுங்கி நிகிடி, அன்ரிச் நார்ஜே, வெரோன் ஃபிலாண்டர், டேன் பீடிட், ககிஸோ ரபாடா, ரூடி செகன்ட்.