இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் இல்லை! மனிதநேயத்தையும் குத்தகைக்கு எடுக்கவில்லை…. பொங்கிய ராஜ்தாக்கரே

 

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் இல்லை! மனிதநேயத்தையும் குத்தகைக்கு எடுக்கவில்லை…. பொங்கிய ராஜ்தாக்கரே

மதத்தை பார்க்காமல் பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து சட்டத்துக்கு புறம்பாக வந்த அகதிகள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும். இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் இல்லை. மனிதநேயத்தையும் குத்தகைக்கு எடுக்கவில்லை என மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே பேசியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தின்படி, 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படமாட்டார்கள். அவர்கள் இந்தியாவில் குடியேறி 5 ஆண்டுகள் முடிந்தவுடன் இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

எம்.என்.எஸ். கட்சி

இந்த சட்டத்துக்கே எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரேவோ, அந்த சட்டத்துக்கும் ஒரு படி மேலே போய், பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து சட்டத்துக்கு புறம்பாக வந்த அகதிகள் அனைவரையும் அவர்களின் மதத்தை பொருட்படுத்தாமல் வெளியேற்ற வேண்டும் என கூறியுள்ளார். புனேவில் நடந்த செய்தியாளர் கருத்தரங்கில் கலந்து கொண்ட ராஜ்தாக்கரே பேசுகையில் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டம் தேவையில்லாதது மற்றும் அதனால் இந்தியாவின் சுமைதான் அதிகரிக்கும். 

முஸ்லிம்- இந்து

சொந்த மக்களின் தேவையே நம் நாட்டால் பூர்த்தி செய்யமுடியவில்லை. இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் இல்லை. வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானிலிருந்து வந்த மக்களை கட்டாயம் வெளியேற்ற  வேண்டும். இந்தியா ஒன்றும் மனிதநேயத்தை குத்தைக்கு எடுக்கவில்லை. இந்த விஷயத்தை இனவாத அடிப்படையில் பார்க்கக்கூடாது. 

இந்திய மக்கள்

இதனை இந்து-முஸ்லிம் பிரச்சினையாக இதனை எடுக்கக்கூடாது. வெளியே (பாகிஸ்தான், வங்கதேசம்) இருந்து வந்த யாராக இருந்தாலும் அவர்களை வெளியேற்ற வேண்டும். நமது சொந்த மக்களின் தேவையே நம்மால் பூர்த்தி செய்யமுடியாமல் உள்ளோம். பின் எதற்கு அடுத்த மக்களுக்கு செய்ய வேண்டும். 130 கோடி மக்களை கொண்ட இந்த நாடு தனது சொந்த மக்களின் தேவை பூர்த்தி செய்யமுடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.