இந்தியா என்றால் என்ன? – டிரம்ப் வருகையை ஒட்டி கூகுளில் தேடிய அமெரிக்கர்கள்

 

இந்தியா என்றால் என்ன? – டிரம்ப் வருகையை ஒட்டி கூகுளில் தேடிய அமெரிக்கர்கள்

டொனால்டு டிரம்ப் இந்திய வருகையை ஒட்டி கூகுளில் அமெரிக்கர்கள் தேடிய வார்த்தைகள் குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி: டொனால்டு டிரம்ப் இந்திய வருகையை ஒட்டி கூகுளில் அமெரிக்கர்கள் தேடிய வார்த்தைகள் குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இரு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 24-ஆம் தேதி இந்தியா வந்தடைந்தார். இதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு 26-ஆம் தேதி அவர் மீண்டும் அமெரிக்கா திரும்பினார். இந்த நிலையில், டொனால்டு டிரம்ப் இந்திய வருகையை ஒட்டி அமெரிக்கர்களும், இந்தியர்களும் கூகுளில் தேடிய வார்த்தைகள் குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் டிரெண்ட்ஸ் அம்சம் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

ttn

அமெரிக்கர்கள் பலரும் இந்தியா என்றால் என்ன…இந்தியா எங்கே இருக்கிறது? என்று கூகுளில் தேடியுள்ளார்கள். அதேபோல டிரம்ப்பின் இந்திய வருகையின் போது, இந்தியர்கள் அதிகமாக ஐ.டி.சி. மவுரியா ஓட்டல் பற்றி தேடியுள்ளனர். அங்கு தான் டிரம்ப் தங்கியிருந்தார். மேலும் டிரம்ப் பாகுபலி’ என்பதையும் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியுள்ளார்கள். டிரம்ப் இந்திய வருகையின்போது பாகுபலி போல அவரை சித்தரித்து ஒரு வீடியோ வெளியானது. பிறகு அது நீக்கப்பட்டது. அந்த வீடியோவைத் தான் இந்தியர்கள் பலரும் தேடியுள்ளனர். அத்துடன் டிரம்பின் குடும்பம், அவரது மகள் இவாங்காவின் பெயர்களும் இந்தியர்களால் அதிகம் கூகுள் செய்யப்பட்டிருக்கிறது.