இந்தியா-இலங்கை 2வது டி20 போட்டி: இன்று பலப்பரிட்சை! வெல்லப்போவது யார்?

 

இந்தியா-இலங்கை 2வது டி20 போட்டி: இன்று பலப்பரிட்சை! வெல்லப்போவது யார்?

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இந்தூர் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

india

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி கவுகாத்தி மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் போட்டியின் நடுவே இடைவிடாமல் மழை குறுக்கிட்டதால் இறுதிவரை ஒரு பங்குகூட வீசாமல் ஆட்டம் தடைபட்டு, இறுதியாக கைவிடப்பட்டது. 

india

இந்நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் இந்தூர் மைதானத்தில் 2வது டி20 போட்டி நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கடந்த மூன்று தொடர்களாக காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் அணியில் இணைந்திருக்கிறார். 

thakur

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் காயம் காரணமாக வெளியேறிய தீபக் சஹார் இன்னும் குணம் அடையாததால் அவருக்கு பதிலாக ஷரத்துல் தாக்கூர் அணியில் இணைக்கப்பட்டு இருக்கிறார். மேலும் இவர்களுடன் இளம் வீரர் நவ்தீப் சைனி அணியில் இடம் பெற்றிருக்கிறார். இதனால் இந்திய அணி பந்துவீச்சில் பலத்துடன் காணப்படுகிறது.

virat

இன்றைய போட்டியில் விராட் கோலி ஒரு ரன் எடுக்கும் பட்சத்தில் ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளி டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் முதல் இடம் பெறுவார்.

இலங்கை அணியை லசித் மலிங்கா வழிநடத்துகிறார். முன்னாள் கேப்டன் ஏஞ்சிலோ மேதியூஸ் சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் டி20 அணியின் இணைவதால் இலங்கை அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும்.

கடந்த முறை இரு அணிகளும் இந்தூர் மைதானத்தில் மோதிய போட்டியில் ஆட்டம் முழுவதும் இந்திய அணி பக்கமே இருந்தது. முழுமையாக ஆதிக்கம் செலுத்தி இந்திய அணி அந்த போட்டியை வெற்றி பெற்றது. இந்தூர் மைதானத்தில் இந்திய அணி பலம் மிக்க அணியாக காணப்படுவதால், இதனை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல. 

india

இன்றைய போட்டியில் பலம்மிக்க இந்திய அணியை இலங்கை அணி வீழ்த்த முயற்சிக்கும் பட்சத்தில் ஆட்டம் அனல் பறக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.