இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்: இறுதிப்போட்டியில் வெற்றி யாருக்கு?

 

இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்: இறுதிப்போட்டியில் வெற்றி யாருக்கு?

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டித் தொடரின் இறுதி ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது

-குமரன் குமணன்

மெல்போர்ன்: இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டித் தொடரின் இறுதி ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.

இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதற்கட்டமான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டித் தொடர் -1 என சமன் ஆனது .ஆடுத்த கட்டமான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று வரலாறு படைத்தது இந்தியா.

ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

இந்நிலையில, இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டித் தொடரின் இறுதி ஆட்டம் மெல்போர்னில் இந்திய நேரப்படி நாளை காலை 7.50 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது.

நாளைய போட்டிக்கான ஆஸ்திரேலிய XI-ல் முதுகுவலியால் வேகப்பந்து வீச்சாளர் பெஹ்ரன்டாஃப் இடம் பெறவில்லை. அவருக்கு பதில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் பில்லி ஸ்டான்லேக் களமிறங்க உள்ளார். நாதன் லியோன் நீக்கப்பட்டு அவருக்கு பதில் லெக் ஸ்பின் பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பா சேர்க்கப்பட்டு உள்ளார்.

உலக கோப்பை நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, அண்மைக்காலமாக இழந்து நிற்கும் அதன் பெருமைய மீட்டெடுக்க இத்தொடரில் வெல்வது முதல் படியாக அமையும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

நடுவரிசை பேட்ஸ்மேன்கள் மற்றும் கூடுதல் பந்துவீச்சாளர் என இரு சிக்கல்களையும் ஒருசேர தீர்க்கும் வகையில் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் அவரவர் பேட்டிங் நிலையிலிருந்து ஒரு படி முன்கூட்டி களமிறக்கப்பட்டு, ஆறாம் எண்ணில் விஜய் ஷங்கர் அல்லது கேதார் ஜாதவ் ஆகியோரில் ஒருவர் நுழைய வாய்ப்புண்டு. இது நிகழும் பட்சத்தில் ராயுடுவுக்கு இடம் இல்லாமல் போகலாம்.

நாளைய போட்டி நடக்கவிருக்கும் மைதானமான MCG-ல் இந்தியா கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணியை அங்கே இந்திய அணி கடைசியாக தோற்கடித்தது 2008-ஆம் ஆண்டு தோனி தலைமையில் பங்கேற்ற முத்தரப்பு தொடரின் போது என்பது குறிப்பிடத்தக்கது.