இந்தியாவை ஆதரிக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் – எங்கேயோ பொகையுற மாதிரி தெரியுது!

 

இந்தியாவை ஆதரிக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் – எங்கேயோ பொகையுற மாதிரி தெரியுது!

இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரித்தது இங்கிலாந்துதான், ஆகையால், பாகிஸ்தானுக்கு எங்கள் ஆதரவு உண்டு என அதே வாக்கெடுப்பில் இந்தியர்களும் பங்கெடுத்து கருத்து சொல்லியிருக்கிறார்கள். எப்புடி ஒண்ணுமண்ணா இருக்குறாய்ங்க

உலககோப்பை புள்ளிகள் பட்டியலில், ஏழு ஆட்டங்களில் ஆடி ஏழு புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறது பாகிஸ்தான். அரையிறுதி வாய்ப்பை பாகிஸ்தான் பெறவேண்டுமெனில், அடுத்துவருகிற இரண்டு ஆட்டங்களில் வெற்றிபெறுவது மட்டுமல்ல, பாகிஸ்தானுக்கு சம்பந்தமில்லாத ஆட்டங்களின் முடிவுகளும் அதற்கு சாதகமாக இருக்கவேண்டும். உதாரணத்திற்கு, வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இங்கிலாந்து வென்றால், அரையிறுதி போட்டிக்கான பாகிஸ்தான் வாய்ப்பு மங்கும், அதே நேரம் இங்கிலாந்து அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொள்ளும். இந்தியாவுக்கு இருக்கும் இன்னும் 3 ஆட்டங்களில் ஒன்றை வெற்றிபெற்றால்கூட போதும்.

Nasser Hussain

இப்போது வருகிறது ஒரு இக்கட்டான சூழ்நிலை பாகிஸ்தான் ரசிகர்களுக்கு. பரம எதிரியான இந்தியாவும் இங்கிலாந்தும் மோதும் ஞாயிறு ஆட்டத்தில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது? இந்த கேள்வியை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன் ட்விட்டரில் பாகிஸ்தான் ரசிகர்களிடம் எழுப்பியிருந்தார். இங்கிலாந்துக்கு ஆதரவு தெரிவித்து அது வெற்றிபெற்றால், தங்கள் சொந்த அணி மூட்டைகட்டி வெளியேற வேண்டும், பரமவைரியானாலும் இந்தியாவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற இரண்டு வாய்ப்புகளில், பெரும்பாலான பாகிஸ்தான் ரசிகர்கள் தங்கள் ஆதரவை இந்தியாவுக்கு தெரிவித்துள்ளனர்.

Indian supporting Pak

அதேசமயம், இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரித்தது இங்கிலாந்துதான், ஆகையால், பாகிஸ்தானுக்கு எங்கள் ஆதரவு உண்டு என அதே வாக்கெடுப்பில் இந்தியர்களும் பங்கெடுத்து கருத்து சொல்லியிருக்கிறார்கள். எப்புடி ஒண்ணுமண்ணா இருக்குறாய்ங்க, இவிங்க ஒத்துமைய பாத்தா, எனக்கே கண்ணுல தண்ணி வச்சிடுச்சி! ஆனா, கண்டிப்பா ஒரு குரூப்புக்கு மட்டும் ரெண்டு காதுலயும் பொகை வரும்!