இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 236 ஆக உயர்வு!

 

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா:  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 236 ஆக  உயர்வு!

தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 173 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை 2 லட்சத்து 75ஆயிரத்து 864  பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது. 

tn

இந்நிலையில்  இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  236 ஆக உயர்ந்துள்ளது.  கர்நாடகா,டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்த நிலையில்  ராஜஸ்தான் மாநிலத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் உயிரிழந்தார்.  இதுவரை 209 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ttn

தமிழகத்தைப்  பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.