இந்தியாவே அலறப்போகும் அடுத்த அதிரடி திட்டம்… மோடி மாஸ்டர் ப்ளான்..!

 

இந்தியாவே அலறப்போகும் அடுத்த அதிரடி திட்டம்… மோடி மாஸ்டர் ப்ளான்..!

இந்தியாவே அலறும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நரேந்திர மோடி இந்திய பிரதமராக பொறுப்பேற்ற கடந்த  2014 ஆம் ஆண்டிலிருந்தே பல வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரும் தீவிர முயற்சிகளில் இந்திய அரசு ஈடுபட்டது. ஆனால் பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகே, பல்வேறு ஒப்பந்தங்களுக்கிடையில் இந்த விஷயத்தில் படிப்படியான ஒத்துழைப்பை இந்திய அரசு பெற்றது. 

குறிப்பாக அதிக பணம் பதுக்கப்பட்டுள்ள சுவிஸ் நாட்டுடன் மேற்கொண்ட முயற்சிக்கு இப்போதுதான் முழுமையான பலன் கிடைத்துள்ளது. குறிப்பாக இந்தியா, ஸ்விட்சர்லாந்து அரசுகளுக்கு இடையே தாமாக முன்வந்து கணக்கு விவரங்களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் கையொப்பம் பெற்ற பிறகும் மத்திய அரசுக்கு கிடைத்துள்ள முதல் பட்டியல் இது. அடுத்த பட்டியல் 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-வது பட்டியல் கிடைக்கும்.

இந்நிலையில் சுவிட்சர்லாந்து அரசு நேற்று ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் குறித்த விவரங்களை முதல்முறையாக அளித்துள்ளது. ஆனால், இந்த விவரங்களை அந்த நாட்டு அரசு அளிக்க மறுத்து விட்டது.

அடுத்து செய்யப்போவது என்ன? இந்த விவரங்களை மத்திய அரசு பெற்று இருப்பதன் மூலம், கறுப்பு பணம் தொடர்பான வழக்குகள், வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளவர்கள், கணக்கில் வராத சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும். இனி வரும் காலங்களில் வரி ஏய்ப்பு செய்து கறுப்புபணம் பதுக்கியோர் மீதான நடவடிக்கையும் தீவிரமாகும். 

இந்த பட்டியலில் பெரும் தொழிலதிபர்கள் , பிரபலமானவர்கள் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, தெற்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் உட்பட  பலர் அதிகமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுநாள் வரை 31 இலட்சம் வங்கி கணக்குகள் தொடர்புடைய  தகவல்களை ஸ்விஸ் அரசு 75 நாடுகளுக்கு அனுப்பியுள்ளதாகவும்  அவர்களிடம் இருந்து 24 லட்சம் தொடர்புடைய விபரங்களை பெற்றுள்ளதாகவும்  இந்த தகவல்களில் கூறப்பட்டுள்ளன. 31 லட்சம் வங்கிக் கணக்குகளில் 51 லட்சம் கணக்குகள் இந்தியாவை சேர்ந்தவர்களிடம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியாவே அலறும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.