இந்தியாவுடான நட்புறவை நாங்கள் பொக்கிஷமாக கருதுகிறோம்…… அடிபணிந்த மலேசியா

 

இந்தியாவுடான நட்புறவை நாங்கள் பொக்கிஷமாக கருதுகிறோம்…… அடிபணிந்த மலேசியா

இந்தியாவுடான நட்புறவை நாங்கள் பொக்கிஷமாக கருதுகிறோம். இரு நாடுகளுக்கு இடையிலான உறவை சீர்செய்ய முன்னுரிமை கொடுப்போம் என மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, இந்தியா தனது மதச்சார்பற்ற அஸ்திரவாரங்களிலிருந்து விலகுகிறது மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்ட பயன்படுத்தப்படுகிறது என மகாதிர் முகமது  சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இந்தியாவின் கோபத்தை கிளறிவிட்டார். இதனையடுத்து அந்நாட்டிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை போட்டது. இதனால் மலேசிய பாமாயில் உற்பத்தியாளர்கள் கடும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது

இந்நிலையில், மலேசியாவில் கூட்டணி கட்சிகளுக்கும் ஏற்பட்ட சண்டையால் மகாதிர் முகமது தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து மலேசியாவின் புதிய பிரதமராக முஹைதீன் யாசின் பொறுப்பேற்றார். இந்தியாவுடான உறவை சீர்செய்வதில் தற்போதைய மலேசிய அரசு ஆர்வமாக உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரும், புதிய அரசில் அமைச்சர் பதவி கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நபருமான வீ கா சியோங் கூறுகையில், இந்தியாவுடான உறவை சீர்செய்வதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் ஏனென்றால் இந்தியாவின் இறக்குமதி தடையால் மலேசிய பாமாயில் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மலேசிய புதிய பிரதமர் முஹைதீன் யாசின்

நாம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாமா? இது எனது நாட்டுக்காக மற்றும் நாட்டு மக்களுக்காக. நாங்கள் புதிய அரசு என்பதால் இந்த விவகாரத்தை பிரதமரும், புதிய அரசும் கவனித்து கொள்ளும். இந்தியாவுடான நட்புறவை நாங்கள் பொக்கிஷமாக கருதுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், மலேசியாவுடான பாமாயில் வர்த்தகம் உள்பட இருதரப்பு உறவையும் மேம்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வமாக உள்ளதாகவும், மலேசியாவின் புதிய பிரதமர் முஹைதீன் யாசின் இந்த ஆண்டு இந்தியாவுக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.