இந்தியாவில் 80 சதவிகிதம் நோயாளிகளுக்கு அறிகுறி இன்றி வேலையைக் காட்டிய கொரோனா! – அதிர்ச்சி தகவல்

 

இந்தியாவில் 80 சதவிகிதம் நோயாளிகளுக்கு அறிகுறி இன்றி வேலையைக் காட்டிய கொரோனா! – அதிர்ச்சி தகவல்

கொரோனா பாதிப்பு இருந்தால் சுவாசப் பிரச்னை, காய்ச்சல், மூச்சுத்திணறல், சளி, இருமல் போன்றவை அறிகுறியாக வெளிப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், அறிகுறிகள் தென்படாமலேயே கூட சிலருக்கு கொரோனா இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 80 சதவிகிதம் பேருக்கு நோய் அறிகுறியே தென்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பாதிப்பு இருந்தால் சுவாசப் பிரச்னை, காய்ச்சல், மூச்சுத்திணறல், சளி, இருமல் போன்றவை அறிகுறியாக வெளிப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், அறிகுறிகள் தென்படாமலேயே கூட சிலருக்கு கொரோனா இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
இந்தியாவில் இதுவரை 17 ஆயிரம் பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 80 சதவிகிதம் பேருக்கு கொரோனா அறிகுறியே தென்படவில்லை என்ற அதிர்ச்சி தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் வெளியிட்டுள்ளார். 

corona-patients-67

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஐ.சி.எம்.ஆர் விஞ்ஞானியும் நோய்த் தொற்றியல் துறை இயக்குநருமான டாக்டர் கங்காத்கர் கூறுகையில், “இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா நோயாளிகளில் 80 சதவிகிதம் பேருக்கு அறிகுறிகள் தென்படவில்லை. இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. நம்முடைய மிகப்பெரிய கவலையே, கொரோனா நோயாளி யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்பதைக் கண்டறிவதுதான்” என்று கூறியுள்ளார்.

corona-symptoms

மத்திய அரசும் இதை உறுதி செய்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்ச செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறுகையில், நோய்த் தொற்று இல்லாதவர்கள் மத்தியில் கொரோனா பாசிடிவ் கண்டறிவது மிக அதிகமாக உள்ளது. இதனால், கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ள அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டியது கட்டமாயமாகிறது. அவர்களை கண்காணித்து, அவர்களுக்கு பரிசோதனை செய்வது அவசியம்” என்றார்.
பஞ்சாபில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 75 சதவிகிதம் பேருக்கும், கர்நாடகாவில் 50 சதவிகிதம் பேருக்கும், மகாராஷ்டிராவில் 70 சதவிகிதம் பேருக்கும், உத்தரப் பிரதேசத்தில் 75 சதவிகிதம் பேருக்கும் அறிகுறிகள் தென்படவில்லை என்றும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. மிகப்பெரிய அளவில் பரிசோதனை மேற்கொள்ளாமல் கொரோனா நோயாளிகளைக் கண்டறிவது மிகவும் கடினம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.