இந்தியாவில் 8.2 லட்சம் பேருக்கு கொரோனா வந்திருக்கும்! – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட மத்திய சுகாதாரத் துறை செயலாளர்

இந்தியாவில் 8.2 லட்சம் பேருக்கு கொரோனா வந்திருக்கும்! – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட மத்திய சுகாதாரத் துறை செயலாளர்

இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தாமல் இருந்திருந்தால் 8 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.

இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தாமல் இருந்திருந்தால் 8 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.
டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், “இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் ஏப்ரல் 15க்குள் 8.2 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும். ஒருவேளை ஊரடங்கை அறிவிக்காமல் கொரோனா தடுப்பு நடவடிக்கை மட்டும் எடுத்திருந்தாலும் 1.2 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்பட்டிருக்கும்.

corona-patients-mp

ஊரடங்கு மற்றும் தீவிர கொரோனா கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கை காரணமாக தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7447 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 642 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1035 பேருக்கு புதிதாக கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 239 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு ஒரு லட்சம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளும், 11,500 ஐ.சி.யு படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என்றே 586 மருத்துவமனைகள் உள்ளன” என்றார்.